🧱 சேங்கல் ( Brick ) ✅ நன்மைகள்: பாரம்பரியமாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மக்கள் நம்பிக்கை அதிகம். வலிமை நல்லது, நீண்ட நாள் நீடிக்கும். சுலபமாக சீரமைப்பு செய்யலாம். ❌ குறைபாடுகள்: எடை அதிகம் → Foundation (அடித்தளம்) வலுவாக இருக்க வேண்டும். குளிர்/வெயில் கட்டுப்பாடு குறைவு → வீட்டுக்குள் சூடு அதிகமாக இருக்கும். கட்டுமான வேகம் சற்று மெதுவாக இருக்கும். விலை ஒப்பிடும்போது AAC விட அதிகம். 🧱 AAC Block (Autoclaved Aerated Concrete Block) ✅ நன்மைகள்: எடை குறைவு → Foundation மீது அழுத்தம் குறையும். நல்ல Thermal Insulation → கோடையில் குளிர்ச்சி, குளிர்காலத்தில் சூடு தக்க வைத்துக்கொள்ளும். கட்டுமான வேகம் அதிகம் (பெரிய பிளாக்குகள்). ஒலி தடுப்பு ( Sound Insulation ) நன்றாக இருக்கும். சுற்றுச்சூழல் நட்பு. ❌ குறைபாடுகள்: சேங்கல் அளவுக்கு “local availability” எல்லா இடத்திலும் இல்லாமலாம். துளைகள் (nails, drilling) எளிதில் செய்ய சற்று சிக்கல். சில நேரங்களில் skilled labour தேவைப்படும். 🏡 எது சிறந்தது? நீண்ட காலம் பழமையான...
நிலம் வாங்கும்போது நாம முக்கியமா கவனிக்க வேண்டிய ஆவணங்கள் பட்டா மற்றும் சிட்டா. இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! ➡️ பட்டா (Patta)னா என்ன? உங்க நிலத்தின் "உரிமையை" உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணம். யார் நிலத்தின் உரிமையாளர், சர்வே எண், நிலத்தின் பரப்பளவு, வகை (விவசாய நிலமா/வீடு கட்டும் நிலமா) போன்ற விவரங்கள் இதில் இருக்கும். அரசு இந்த ஆவணத்தை வழங்கும். இதுதான் நிலத்தின் சட்டபூர்வமான ஆதாரம்! ➡️ சிட்டா (Chitta)னா என்ன? இது நிலத்தின் "வகை" மற்றும் "பயன்பாடு" பத்தி சொல்லும் ஒரு ஆவணம். நிலம் நன்செய் நிலமா (ஈரமான நிலம்) அல்லது புன்செய் நிலமா (வறண்ட நிலம்) போன்ற விவரங்கள் இதில் இருக்கும். கிராம நிர்வாக அலுவலர் (VAO) இந்த விவரங்களை பராமரிப்பார். முக்கிய குறிப்பு: 2015 ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு பட்டா மற்றும் சிட்டா இரண்டையும் ஒரே ஆவணமாக இணைத்துவிட்டது. இப்போ நீங்க 'பட்டா' வாங்குனாலே, அதுல சிட்டாவில் இருந்த தகவல்களும் சேர்ந்து இருக்கும்! நிலம் வாங்கும் போது இந்த விவரங்களை சரிபார்த்து, பாதுகாப்பான முதலீடு செய்யுங்கள்! 👍 #நிலம் #பட்ட...

Comments
Post a Comment